திருவாரூர், ஜூன். 05 –

திருவாரூர் புதிய இரயில் நிலையம் முன்பு கர்நாடக அரசு தொடர்ந்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டு வருவதால், அதனைக்கண்டிக்கும் வகையில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கர்நாடக துணை முதல் அமைச்சர் சிவக்குமார் உருவபொம்மை எரிப்பு போராட்டம், திருவாரூர் இரயில் நிலையம் அருகே நடைப்பெற்றது.

இன்றைய சூழலில் கர்நாடகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டு வருகிறது அந்த வகையில் அண்மையில் கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் மேகதாதுவில்  காவிரியின் குறுக்கே அணை கட்டப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில துணை முதல்வரின் இத்தகைய அறிவிப்பால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர் ஆனால் இதனை தட்டிக் கேட்க வேண்டிய திமுக தலைமையிலான தமிழக அரசு காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து இருப்பதால் வாய்மூடி மௌனம் சாதிக்கிறது.

இத்தகைய விவசாய விரோத போக்கை கொண்டுள்ள கர்நாடக அரசை கண்டிக்கும் வகையில் தமிழக விவசாயிகள் நலச் சங்கத்தினர் திருவாரூர் ரயில் நிலையம் முன்பு கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து  தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் கர்நாடக அரசின் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்தும் திமுக அரசு இதனை தட்டிக் கேட்க வேண்டி வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here