கும்பகோணம், பிப். 13 –

கும்பகோணம் நகரில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று மாசி மக பெருவிழா. கடந்த 8ஆம் தேதி 6 சிவாலயங்களில் கொடியேற்றம் தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது என தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான ஓலைசப்பரம் நடைபெற்றது.

இதில் ஆதிகும்பேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காசிவிசுவநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கௌதமேஸ்வரர் ,ஆகிய ஆலயங்களில் 10 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஓலைச் சப்பரபவனி நேற்று இரவு நடைபெற்றது.

ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தின் ஓலைசப்பரத்தில், மங்களாம்பிகையுடன் ஆதிகும் பேஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஓலைச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலாவாக உச்சிபிள்ளையார் கோயில் அருகே வந்தபோது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

இதே போல வியாழ சோமேஸ்வரர் காளகஸ்தீஸ்வரர் அபிமுகேஸ்வரர் காசி விஸ்வநாதர் கௌதமேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் இருந்தும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஓலைச் சப்பரங்களில் உற்சவர்கள் எழுந்தருளி திருவீதியுலாவாக உச்சிபிள்ளையார் கோயில் அருகே எழுந்தருளினார்கள் ஒரே இடத்தில் ஓலைச் சப்பரங்கள் நிறுத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக எதிர்வரும் 17ஆம் தேதி மகாமகத் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here