ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரைத் துவையல்

 

தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க தினமும் உணவில் வல்லாரைக்கீரையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று வல்லாரைத் துவையல் செய்முறையை பார்க்கலாம்.

 

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரைத் துவையல்

தேவையான பொருட்கள் :

 

வல்லாரைக் கீரை – ஒரு கட்டு,

 

கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்,

 

உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்,

 

தோலுரித்த சின்ன வெங்காயம் – 10,

 

புளி – நெல்லியளவு,

 

சீரகம் – அரை டீஸ்பூன்,

 

காய்ந்த மிளகாய் – 4,

 

தேங்காய்த் துருவல் – சிறிதளவு.

 

தாளிக்க :

 

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,

 

கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நல்லெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்.

 

செய்முறை :

 

வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

 

அதனுடன் வெங்காயம், மிளகாய், கீரை, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.

 

ஆறிய பின் புளி, உப்பு சேர்த்து துவையலாக அரைத்து கொள்ளவும்.

 

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து துவையலுடன் கலந்து பரிமாறவும்.

 

சூப்பரான வல்லாரைத் துவையல் ரெடி

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here