ராமநாதபுரம், ஜூலை 23- ராமநாதபுரம் பெரிய கண்மாயிலிருந்து அய்யர்மடம் ஊரணிக்கு வரும் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு கொடுக்கப் பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுனாள் கிராமத்தை சேர்ந்த விவசாயி அதிவீர பாண்டியன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கொடுத்துள்ள மனுவில் தெரிவித் திருப்பதாவது:
ராமநாதபுரம் தாலுகா சூரன்கோட்டை குரூப் பெரிய கண்மாயிலிருந்து இடையர் வலசை அய்யர்மடம் ஊரணிக்கு சுமார் 20 அடி அகலமுள்ள வரத்துக்கால்வாய் உள்ளது. இந்த வரத்துக்கால்வாய் மூலம்தான் அய்யர்மடம் ஊரணிக்கு முன்பெல்லாம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. ஆனால், தற்போது தனிநபர் ஒருவர் 20 அடி வரத்துக்கால்வாய் முழுவதையும் அக்கிரமித்து விட்டார். ஆக்கிரமித்து அதில் கட்டடம் எழுப்பி விட்டதால் வரத்துக் கால்வாய் காணாமல் போய்விட்டது. இதனால் அய்யர்மடம் ஊரணிக்கு பெரிய கண்மாயிலிருந்து தண்ணீர் வருவதற்கு வழியில்லாத அவல நிலையை செயற்கையாக உருவாக்கி விட்டனர்.
தற்போது தமிழகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கண்மாய்கள், ஊரணிகள், நீர் நிலைகளில் நீர்நிலையை உயர்த்துவதற்காக குடிமராமத்து பணிகளை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செய்து வருகிறார். அதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் குடிமராமத்து பணியில் தனிகவனம் செலுத்தி சிறப்பாக செய்து விவசாயிகளுக்கு நல்உதவியாக திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், எங்கள் ஊரான இடையர்வலசை அய்யர்மடம் ஊரணியில் குடிமராமத்து பணி மேற் கொள்ளலாம் என திட்ட மிட்டிருந்தோம். ஆனால் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளதால் குடிமராமத்து பணி செய்ய முடியாத நிலை உள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி எங்கள் ஊரிலும் குடிமராமத்து பணி நடை பெறுவதற்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

செய்திகள் தமிழ்நாடு தென்மண்டல தலைமைச் செய்தியாளர் இ.சிவசங்கரன்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here