கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு இன்று கையில் தீபம் ஏந்தி செவிலியர்கள் சேவை உறுதி மொழி ஏற்றபோது எடுத்தப்படம்

கும்பகோணம், மே. 12 –

கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தையொட்டி, சுகாதாரத் துறையின் முதுகெலும்பாக விளங்கும் செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

இப் பூமியில் மனித உயிர்கள் தங்கள் உடல் நிலையை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் செவிலியர்களின் பங்கு மிக பெரிதாக வகிக்கின்றது. அவர்களின் மருத்துவ சேவை அர்ப்பணிப்பும், கருணை உணர்வோடு ஆற்றும் பணியும் போற்றுதலுக்குரியதே.. மிகவும் சவாலான காலச் சூழ்நிலையிலும், செவிலியர்களின் தங்களை வருத்திக்கொண்டு சிறப்பாக பணிகளை அனைத்து செவிலியர்களுக்கும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு இன்று சுகாதாரத் துறையின் முதுகெலும்பாக விளங்கும் செவிலியர்களின் கண்காணிப்பாளர் செந்தாமரைச் செல்வி மற்றும் உமா மகேஸ்வரி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக் கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

இந்நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் மருத்துவர் பிரபாகரன் கண்காணிப்பாளர் மருத்துவர் கமரூல் ஜமான் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜிஆர்டி தங்க மாளிகை சார்பில் சுவர் கடிகாரம் மற்றும் இனிப்புகள் வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here