கும்பகோணம், ஆக. 30 –

கும்பகோணம் மாநகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அங்குப் பணிப்புரிந்த செவிலியர் திடீரென தூக்கிட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில் அச் செவிலியரின் உறவினர்கள் அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால், அப்பகுதியில் பரப்பரப்பு நிலவியது. அத்தகவலறிந்து அங்கு வந்த கும்பகோணம் போலீசார் சாலை மறியலில் ஈடுப்பட்ட 15 க்கும் மேற்பட்டவர்களை அதிரடியாக கைது செய்தனர்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா, மணலூர் திருமாந்துறை தோப்புத்தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கோவிந்தராஜன். மேலும் அவருடைய மகள் வைஷ்ணவி (வயது 22) நர்சிங் படித்து முடித்து விட்டு கும்பகோணம் மாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் அம்மருத்துவமனை கட்டடத்தின் 3 வது மாடியில் உள்ள செவிலியர் ஓய்வறையில் வைஷ்ணவி சில மாதங்களாக அங்கு தங்கி அம் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதற்கிடையே நேற்று  இரவு வேலையை முடித்து விட்டு அறைக்கு சென்ற வைஷ்ணவி இன்று காலை நீண்ட நேரமாகியும் வெளியில் வராத தால், சந்தேகம் அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் வைஷ்ணவி தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

ஓய்வறையில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு வைஷ்ணவி உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பதைக் கண்ட, ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக கும்பகோணம் மேற்கு காவல்நிலைய காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்னர்.

அத்தகவலிறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், வைஷ்ணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுக்குறித்து தகவலயறிந்த வைஷ்ணவியின் உறவினர்கள், அரசு மருத்துவமனை முன்பு ஒன்று திரண்டவர்கள் தொடர்ந்து வைஷ்ணவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவர்கள் அனைவரும் புகார் தெரிவித்து மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து காவல்துறையினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்தனர்.

அதன் பேரில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர். போராட்டத்தின் காரணமாக  சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு சீர் நிலைக்கு வந்தது.

போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்ற செவிலியர் வைஷ்ணவியின் உறவினர்கள், அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். காவல்துறை குடியிருப்பு பகுதி அருகில் ஊர்வலமாக சென்றவர்களை அங்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன், தலைமையில் 15 க்கும் மேற்பட்டவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வேனில் ஏற்றி கைது செய்தனர்.

அங்கிருந்து 30க்கும் மேற்பட்ட பெண்கள் தனியார் மருத்துவமனை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற போது அரசு போக்குவரத்து கழகம் அருகே பெண்களையும் வலுக்கட்டயமாக இழுத்து வேனில் ஏற்ற சென்றபோது காவல்துறைக்கும் பெண்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயிரிழந்த வைஷ்ணவிக்கு, நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று குடும்பத்தினரும் மற்றும் உறவினர்களும் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here