திருவாரூர். மார்ச். 18 –
தமிழ்நாட்டின் ஒரே மத்திய பல்கலைக் கழகமான திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய நெல் மாநாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து தேசிய அளவிலான பாரம்பரிய நெல் மாநாட்டினை நடத்தினார்கள்.
மேலும் இம்மாநாட்டிற்கு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையேற்று வழி நடத்தினார். மேலும் இத்தேசிய பாரம்பரிய நெல் மாநாட்டில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அங்கு உரை நிகழ்த்தினார்.
மேலும் இம்மாநாட்டில், நாடு முழுவதிலும் இருந்து கொண்டு வரப்பட்ட பாரம்பரிய அரிசியில் உள்ள மருத்துவ குணங்கள், உயிர் சத்துக்கள் மற்றும் உயிர் மூலக்கூறு சேர்மங்கள் தொடர்பான அறிவியல் பூர்வ ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
மேலும் இந்தியா முழுவதிலிருந்து 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் விதைகள் சேகரிக்கப்பட்டு அதன் மருத்துவ குணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்வதற்காக நாடு முழுவதும் இருந்து 25க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், இம்மாநாட்டைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்ததாவது….
வரும் தலைமுறைக்கு நமது பாரம்பரிய நெல்லை எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. எனவும், மேலும் விவசாயிகளோடு இணைந்து தமிழக அரசு இயற்கையையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் என உறுதி அளித்தார்.
மேலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஓஎன்ஜிசிக்கு அனுமதி வழங்கப்படாது என்று அப்போது அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பேட்டி : தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்.