இந்திய ஜனாதிபதியின் விமானம் பாகிஸ்தான் வான்பரப்பில் பறக்க அனுமதி மறுப்பு : முகமது குரோஷி
இந்திய ஜனாதிபதியின் விமானம் தங்கள் வான்பரப்பில் பறக்க அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 9 ஆம் தேதி ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதற்காக பாகிஸ்தான் வான்வழியாக செல்ல அந்நாட்டிடம் இந்திய வெளியுறவுத்துறை அனுமதி கோரியது....
தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி – இன்று அவசரமாக கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்
தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இலங்கையை உலுக்கியுள்ள நிலையில், இன்று அந்நாட்டு பாராளுமன்றம் அவசரமாக கூடுகிறது.
கொழும்பு,
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் நேற்று முன்தினம் நடந்து கொண்டிருந்தபோது, தேவாலயங்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன. அடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்புகளால்...
இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் மூலம் போர்க்குற்ற விசாரணை – தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தல்
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009–ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின் போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் மாயமாகினர். இந்த போரின்போது இலங்கை ராணுவம் கடுமையான போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக புகார் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமை...
கொலம்பியாவில் 6.1 ரிக்டரில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள் ஓட்டம்
கலி:
தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள கொலம்பியாவில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. வல்லே டெல் கயூகா மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 2.19 மணியளவில் பூமி குலுங்கியது.
இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில்...
ராணுவத்திற்கான பட்ஜெட்டை 177.61 பில்லியன் டாலர்களாக உயர்த்தியது சீனா
பீஜிங்:
உலகிலேயே ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட்டை நெருங்கி உள்ளது. 2015ம் ஆண்டு வரை இரட்டை இலக்க சதவீதத்தில் பட்ஜெட்டை உயர்த்திய சீனா, 2016ம் ஆண்டு 7.6 சதவீதமும், 2017ம்...
அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி-23 பேர் பலி
வாஷிங்டன்:
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் அலபாமா. இங்கு நேற்று முன்தினம் மாலை பலத்த சூறாவளி தாக்கியது.
மணிக்கு 266 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதில் அலபாமா மாகாணம் பந்தாடப்பட்டது. அங்கு உள்ள பல்வேறு நகரங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.
குறிப்பாக லீ கவுண்டி மற்றும் பெவுரேகார்டு ஆகிய நகரங்கள்...
மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள்-இந்துக்களை தரக்குறைவாக விமர்சித்த பாகிஸ்தான் மந்திரி
இஸ்லாமாபாத்ள்:
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் செய்தி மற்றும் கலாச்சார மந்திரியாக இருப்பவர் பையாசூல் ஹசன்சோகன்.
இவர் “சமா” செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் பசுவின் மூத்திரத்தை குடித்து வாழ்பவர்கள். அவர்களை போல பாகிஸ்தானியர்கள் இல்லை.
பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு தனி கொடி இருக்கிறது. தனி...
இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை நீக்குவோம்-டிரம்ப் மிரட்டல்
வாஷிங்டன்:
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரை வரி விதிப்பதாகவும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி எதுவும் விதிக்கப்படுவது...
நெருக்கடிக்கு பணிந்து மசூத் அசார் சகோதரர் உள்பட 44 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கைது செய்தது
இஸ்லாமாபாத்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 14-2-2014 அன்று ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவுபெற்ற பயங்கரவாத நடத்திய தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது.
பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.
பாகிஸ்தானில்...
அணு ஆயுதங்களை கைவிடும் வரையில் வடகொரியாவுக்கு எதிர்காலம் இல்லை – டிரம்ப் திட்டவட்டம்
வாஷிங்டன்:
அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்த வடகொரியாவுடன் அமெரிக்கா, கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை...