Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ.10 கோடி அரசு செலவில் போராட்டம் நடத்துவதா?-சந்திரபாபு நாயுடுவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஐதராபாத்: ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் வளாகத்தில் 12 மணிநேரம் தொடர் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் உட்பட பொதுமக்கள், தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள்...

ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு 39 தொகுதி, உ.பி.யில் பிரியங்காவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு-ராகுல் காந்தி திட்டம்

புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். அரசியல் களத்தில் கால் பதித்துள்ள பிரியங்கா காந்தி வருகை காங்கிரசாரை உற்சாகப்படுத்தி இருக்கிறது. பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் கட்சி தொண்டர்களை சந்திப்பது, சுற்றுப் பயணம் என மும்முரமாக உள்ளார். கடந்த 11-ந்தேதி...

உ.பி. கும்பமேளாவில் பாஜக தலைவர் அமித்ஷா, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் புனித நீராடினர்

லக்னோ: உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரில் நடக்கிற கும்பமேளா மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம். அந்த வகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த...

காஷ்மீர் பள்ளியில் குண்டுவெடிப்பு-மாணவர்கள் காயம்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இன்று பிற்பகல் பயங்கரமான சப்தத்துடன் குண்டு வெடித்தது. இந்தப் பள்ளியின் மீது பயங்கரவாதிகள் குண்டு வீசினார்களா? அல்லது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியதா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. இச்சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் உடனடியாக...

ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் பந்த்-மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவு 35-ஏக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளை தொடர்ந்து வழங்க வலியுறுத்தியும், பிரிவினைவாத அமைப்புகள், இரண்டு நாட்களுக்கு முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தன. அதன்படி இன்று முழு அடைப்பு...

குஜ்ஜார் இன மக்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு- ராஜஸ்தான் சட்டசபையில் மசோதா தாக்கலானது

ஜெய்பூர்: ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் தீவிரமாக நடத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்...

திரிணாமுல் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி முன்ஜாமின் பெற்றார்

கொல்கத்தா: மேற்கு வங்காளம் மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ளது கிருஷ்ணகஞ்ச் சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்யஜித் பிஸ்வாஸ். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இந்நிலையில், எம்.எல்.ஏ. சத்யஜித் பிஸ்வாஸ் வங்காளதேசம் நாட்டின் எல்லைப்பகுதியான நாடியா மாவட்டம், புல்வாரியில் உள்ள...

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து-ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தார் சந்திரபாபு நாயுடு

புதுடெல்லி: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முன்னாள் பிரதமர்...

இன்று மாலை நடைதிறப்பு-பெண்கள் வர வாய்ப்புள்ளதால் சபரிமலையில் மீண்டும் பதட்டம்

திருவனந்தபுரம்: சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஐயப்ப பக்தர்களிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளும் கேரளாவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சபரிமலை கோவில் நடைதிறப்பின்போது, சபரிமலை செல்லும் இளம்பெண்களையும்...

ராஜஸ்தானில் மேலும் 79 பேருக்கு பன்றிக்காய்ச்சல்-பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. பார்மர், ஜெய்சால்மர், ஜெய்ப்பூர், உதய்பூர் மற்றும் சிட்டோர்கர் ஆகிய பகுதிகளில் நேற்று 5 பேர் பலியாகினர். இதன்மூலம் இந்த ஆண்டின் துவக்கம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS