அஜித்குமாரின் தீவிர ரசிகராக அதர்வா
அதர்வா நடிப்பில் அடுத்ததாக பூமராங் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அதர்வா தற்போது ‘8 தோட்டாக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வாவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
இதில் அஜித்குமார் மீது அன்பு கொண்ட தீவிர...
தமிழ் சினிமாவில் 20 கோடி பார்வையாளர்களை பெற்ற முதல் வீடியோ பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது ‘ரவுடி பேபி’
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலட்சுமி, ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது....
மாமனிதன் படத்தை குறுகிய இடைவேளையில் முடித்த விஜய் சேதுபதி
சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் ‘மாமனிதன்’. இதில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்கிறார்.
தென் தமிழகம் மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில்...
துருவ் ஜோடியாகும் ஜான்வி கபூர்
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார்.
வர்மா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. துருவ்வை கதாநாயகனாக வைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தி படத்தை வருகிற...
தர்மபிரபு படக்குழு இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு தயாராகிறது
விமல், வரலட்சுமி நடித்துள்ள `கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்ததாக இயக்கிவரும் படம் `தர்மபிரபு'. யோகி பாபு, `வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.
முழு நீள நகைச்சுவை படமாக உருவாகும் இதில், யோகிபாபு...
அரசியல்வாதியாக விஜய் ஆண்டனி!
`திமிரு புடிச்சவன்' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக `கொலைகாரன்' படம் ரிலீசாக இருக்கிறது. விஜய் ஆண்டனி தற்போது, `அக்னிச் சிறகுகள்', `தமிழரசன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து விஜய் ஆண்டனி...
கார்த்தியுடன் இணைந்த சூர்யா
`கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ரிலீசாகவிருக்கும் படம் `தேவ்'. அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
இப்படம் வெளியாகும் திரையரங்குகளில் சூர்யாவின் ‘என்.ஜி.கே’...
கன்னடத்தில் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் சாயிஷா
வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சாயிஷா கடந்த ஆண்டு கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் என மூன்று படங்களில் நடித்திருந்தார். கடைக்குட்டி சிங்கம் படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி வரும் இவர் தெலுங்கில் அகில் திரைப்படத்திலும் இந்தியில்...
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்'. அரந்த்சாமி - ரெஜினா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த...
இன்றைக்கும் அந்த காமெடி பேசப்படுவதற்கு கவுண்டமணி அண்ணனும் காரணம்-செந்தில்
நடிகர் செந்தில், தன்னுடைய அனுபவங்களை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்டு பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
இன்றைக்கு லட்சம் கோடி என்று எல்லாம் சம்பளம் பேசுகிறோம். ஆனால் அன்றைக்கு ஐயாயிரம் தான் சம்பளமாக கிடைத்தது. படிப்படியா முன்னுக்கு வந்து, மக்கள் மனங்களில் இடம்பிடித்ததுதான் பெரிய சந்தோஷம்.
இன்று சினிமாவை...

























