கும்பகோணம், ஜூன். 20 –

கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை வடக்குமாங்குடி பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்தவர் முகமதுபாரூக் (70) இவர் உடல் நலகுறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு மருத்துவச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் சென்னையிலிருந்து, அவரது சொந்த ஊரான வடக்குமாங்குடிக்கு எடுத்து வந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அவரது மகன் புர்கானுதீன் (32) என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு திருபுவனம் பகுதியில் மதமாற்றம் செய்வது தொடர்பாக தட்டி கேட்டதால் பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.

இந்நிலையில் அவரது தந்தை இறப்பிற்கு  புர்கானுதீன்  வருவதற்கு உண்டான சூழ்நிலை இருப்பதாக தேசிய புலனாய்வு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், வடக்குமாங்குடியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி தலைமையில் காவல் ஆய்வாளர்கள் கரிகாலச்சோழன், கலைவாணி, அனிதாகிரேசி உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் வரை குற்றவாளி வராததால், காவல்துறையினர் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். குற்றவாளி கைதுக்காக அப்பகுதியில் காவல்துறை குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here