இராசிபுரம், ஜூலை. 19 –

சென்னையில் நடக்க உள்ள, செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து, மல்லசமுத்திரத்தில் உள்ள பள்ளி  மாணவர்களிடையே, பள்ளிக்கல்வித்துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

சென்னையில் எதிர் வரும் ஜூலை 28 மற்றும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரையில் இது நம்ம சென்னை .. இது நம்மசெஸ் … என்ற தலைப்பின்கீழ், 44 வது செஸ்ஒலிம்பியாட் போட்டிகள் நடக்க உள்ளது.

முதன் முறையாக தமிழகத்தில் நடக்கும் இந்த போட்டியில், 186 நாடுகளைச் சேர்ந்த, 2000 க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இப்போட்டியை அரசு பள்ளி மாணவர்கள் நேரடியாக பார்க்க, சர்வதேச வீரர்களுடன் கலந்துரையாட, தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை மூலம் ஏற்பாடு செய்துள்ளது.

அதனை மாணவர்களிடையே எடுத்துச்செல்லும் விதத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் செஸ்ஒலிம்பியாட் போட்டி குறித்தும், சர்வதேச வீரர்களுடன் கலந்துரையாடும் வழிமுறை குறித்தும் எடுத்துரைத்தனர்.

மேலும், மல்லச்சமுத்திரம் முழுவதும் துண்டு பிரசுரம் வழியாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, மல்லசமுத்திரம் சந்தைப்பேட்டை, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஒலிம்பிக் விவரங்கள் குறித்த, விளம்பர தட்டிகள் வைத்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here