மீஞ்சூர், மே. 08 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியாகும் இப்பேரூராட்சி 18 வார்டுகளைக் கொண்டது. இப்பேரூராட்சி பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் அடிப்படை தேவையான குடிநீர்,. மின்விளக்கு, சாலை வசதி. சுகாதார வசதிகள். உள்ளிட்டவைகளை பேரூராட்சி நிர்வாகம் சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் இன்று திடீரென்று இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 18 வது வார்டில் நடைபெற்று வரும் பேவர்பிளாக் சாலை அமைக்கும் இடத்திற்கு நேரடியாகச் சென்று பணிக்குறித்து கள ஆயவு மேற்கொண்டார்.
தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறையை ஆய்வு செய்தார். அதேப் போன்று பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை வகைப் பிரித்து முறைப்படுத்தும் குப்பை கிடங்கிற்கு சென்று குப்பைகளை சரியான முறையில் வகைப் பிரித்து அப்ப்புறப்படுத்த படுகின்றனரா என சோதணை செய்தார்.
மேலும் கழிவுநீர் கால்வாய் களை தூர்வாரி தீவிரமாக சுத்தப்படுத்த வேண்டும் என ஆணையிட்டார். உடன் திட்ட இயக்குனர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் சரவணன், பேரூராட்சியின் செயல் அலுவலர் வெற்றிஅரசு. பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் .துணை தலைவர் அலெக்சாண்டர். மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் இருந்தனர்.