கும்பகோணம், ஜூலை. 24 –

சிதம்பரம், சீர்காழி பகுதிகளில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடாமல் வீணாக காவேரி நீர் கடலில் கலப்பதை உடனடியாக தடுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை மூவேந்தர் முன்னேற்ற முன்னணி நடத்தும் என ஸ்ரீதர் வாண்டையார் தெரிவித்துள்ளார்.

அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடாமல் வீணாக கடலில் கலக்கிறது எனவும் அதனை உடனே தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு மூவேந்தர் முன்னேற்ற முன்னணி தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் மழைநீர் நிரம்பி அதிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணை முழுவதுமாக நிரம்பி விட்டது. மேலும், மேட்டூரில் இருந்து கடந்த மூன்று தினங்களாக வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் காவிரியில்  திறந்து விடப்படுகிறது.

அந்த நீர் காவேரி பாசனத்துக்கு போக மீதமுள்ளவை கொள்ளிடம் ஆற்றில் பிரித்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் விவசாயத்திற்கு சிதம்பரம் சீர்காழி தாலுகாவிற்கு திறந்து விடாமல் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள் எனவே அதனை உணர்ந்து தமிழக அரசு தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூவேந்தர் முன்னேற்றக் முன்னணி தலைவர் ஸ்ரீதர் வாண்டையார்  கோரிக்கை விடுத்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here