காஞ்சிபுரம், மார்ச். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்

காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்பந்துர் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில்  மாற்றுக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழா நடைப்பெற்றது. அதில் 70 க்கும் மேற்பட்ட  பெண்கள் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி வந்து, மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு முன்னிலையில் தங்களை பாஜகவின் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து முன்னணி அரசியல் கட்சியினரும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல்,மாற்றுக்கட்சியினரை இணைத்தல்,பூத் கமிட்டி அமைத்தல் போன்ற பல்வேறு விதமான தேர்தல் பணிகளை மேற்கொண்டு தங்களது கட்சியினை பலப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் ஸ்ரீபெரும்பந்துர் மேற்க்கு ஓன்றியம் மாவட்ட துனண தலைவர் எல்லாம்மா குணசேகரன் ஏற்பாட்டில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணையும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் கே.எஸ்.பாபு முன்னிலையில் மாற்றுக்கட்சியிலிருந்து விலகிய சுமார் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் பாரதிய ஜனதா கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டு, பாஜகவின் உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டனர்.

மேலும் தாங்கள் அனைவரும் பாரத பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தவும், பாஜகவின் வளர்ச்சிக்கும், தொடர்ந்து மக்கள் நல பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்காக தங்களை பாஜகவில் இணைத்துக் கொள்வதாகவும் பாஜகவில் இணைந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர்கள் பார்த்தசாரதி, ருத்ரகுமார், மாவட்ட துணைத் தலைவர் ஜம்போடை சங்கர்,   டிஜிட்டல் ஸ்ரீதர் ஒன்றிய தலைவர் செந்தில்குமார் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here