காஞ்சிபுரம், பிப். 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கல்விப் பயிலும் பிரபல தனியார் பள்ளியில், எதிர் வரும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத் தேர்வு நடைப்பெறுவதை முன்னிட்டு அப்பள்ளியில் இன்று பெற்றோர் மற்றும் மாணாக்கர்களின் சந்திப்புக் கூட்டம் நடைப்பெற்றது.

அதில் பங்கேற்ற 500 க்கும் மேற்பட்ட அப்பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்களின் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்து அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றனர்.

மேலும் முன்னதாக அச் சந்திப்புக் கூட்டத்தில் தங்களின் தாய் தந்தை செய்யும் தியாகங்கள் குறித்தும் தாய் தந்தைக்கு குழந்தைகள் எப்படி கைமாறு செய்ய வேண்டும் என்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் அதனைத்தொடர்ந்து மாணவ மாணவிகள் தங்களுடைய பெற்றோருக்கு பாத பூஜை செய்து பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெற ஆசிர்வாதம் பெற்றனர். அதேபோன்று பூஜையின் பொழுது தாய் தந்தை தொடர்பான பாடல்கள் ஒலிக்கப்பட்ட பொழுது திடீரென உணர்ச்சிவசப் பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண் கலங்கிய சம்பவம் அனைவரின் நெஞ்சங்களிலும் நெகிழ்வினை ஏற்படுத்தியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here