சோழவரம், மார்ச். 24 –
சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் இன்று ஒன்றிய பெருந்தலைவர் ராஜாதி செல்வசேகரன் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் இன்று ஒன்றிய பெருந்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன் மற்றும் ஒன்றிய துணைத் தலைவர் மீ.வே கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தமன்னன் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது. ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை தீர்மானமாக வாசிக்கப்பட்டது.
ஒரக்காடு ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கரன் பேசுகையில் ஒரக்காடு ஊராட்சிக்கு அடங்கிய தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி 5 ஆண்டுகள் மேலாகியும் அரசு ஆரம்பப் பள்ளியில் போதிய சத்துணவு பணியாளர்கள் இல்லாததால் உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவை செய்து கொண்டு வருவதால் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு போதிய நேரத்தில் உணவு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார் மேலும் ஆரம்பப்பள்ளியில் சத்துணவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் விச்சூர் சகிலா சகாதேவன் அருமந்தை மொழியரசி செல்வம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்






















