மீஞ்சூர், ஆக. 14 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டான லால் பகதூர் சாஸ்திரி தெருவில் 2022-23 ஆம் ஆண்டு பதினைந்தாவது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகம் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா அப்பகுதியில் நடைபெற்றது.
பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் இவ்விழாவற்கு தலைமை வகிக்க, மேலும் தலைமை மருத்துவர் மகேந்திரவர்மன், பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு, துணைத் தலைவர் அலெக்சாண்டர், வார்டு உறுப்பினர் துரைவேல் பாண்டியன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பஙைகேற்ற பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ரிப்பன் வெட்டி அப்புதிய அரசு ஆரம்ப சுகாதார மையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இச்சிறப்புமிகு விழாவில், வார்டு உறுப்பினர்கள் சங்கீதா சேகர், நக்கீரன், அபூபக்கர், கவிதா சங்கர், சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் கோபி உள்ளிட்டவர்களும், திரளான அப்பகுதி பொதுமக்களும் பங்கேற்றனர்.