ராமநாதபுரம்:
தி.மு.க. ஊடகங்கள் நடத்திய கருத்து திணிப்புக்கு மே 23-ல் முற்றுப் புள்ளி வைக்கப் படும் என அமைச்சர் டாக்டர் எம்.மணி கண்டன் கூறினார்.
இது குறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுகவின் ஊடகங்கள் திமுக கூட்டணி தான் அதிக இடத்தை கைப்பற்றும் என போலி கருத்து கணிப்புகள் நடத்தி அந்த கணிப்புகளை திணித்து மக்களை ஏமாற்றி எப்படியாவது ஓட்டுக்களை பெற்று விடலாம் என ஸ்டாலின் எண்ணினார். மக்களின் இதயங்களில் யாருக்கு இட இருக்கிறது என்பதை மறந்து கருத்து கணிப்பு களால் கணித்து விட முடியாது.
மக்களின் இதயங்களில் வாழ்ந்தவர் இதய தெய்வம் எம்.ஜி.ஆர்.. அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த எதிர்க் கட்சியினர் ஒன்று திரண்டு போலி கருத்து கணிப்புகள் நடத்தி னாலும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் அன்பு பிள்ளை களாக திகழும் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் வரை கணிப் புக்கும், திணிப் புக்கும் இங்கு வேலை யில்லை.
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து களப் பணி ஆற்றி கழக அரசின் நலத் திட்டங்களை எடுத் துரைத்து வாக்கு சேகரித்தனர். டிடிவி. தினகரனும், திமுக தலைவர் ஸ்டாலினும் கூட்டு சேர்த்துக் கொண்டு போலி கருத்து கணிப்புகளை நடத்த சில ஊடகங்களை விலை பேசியுள்ளனர். இவர்கள் நடத்தும் நாடகங்களை மக்கள் நம்ப தயாராக யில்லை. மே 23-ல் கருத்து திணிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்கப் படும்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற கூட்டணி கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கும், பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் சதன் பிரபா கரனுக்கும் வாக்களித்த மக்களுக்கும், என்னுடன் இரவு பகல் பாராமல் கண் விழித்து களப் பணி யாற்றிய கழக தொண்டர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், அமை தியான முறை யில் வாக் களிக்க பாது காப்பு ஏற் பாடுகள் செய்த காவல் துறையினர் அனை வருக்கும் எனது நெஞ் சார்ந்த நன்றியை தெரி வித்துக் கொள் கிறேன்.
இவ்வாறு அமைச்சர் டாக்டர் எம்.மணி கண்டன் கூறினார்.