மயிலாடுதுறை, மார்ச். 03 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்

மயிலாடுதுறை மாவட்டம், சிறப்பு தூர்வாறும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில் 689 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.10 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளுக்கான தொடக்க விழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் அப்பணிகளை துவக்கி வைத்து அப்பணியில் ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். முன்னதாக அவ்விழாவிற்கான பூஜைப் பொருட்களை பிளாஸ்டிக் பையில் வாங்கி வந்து வைத்திருந்ததற்காக அதிகாரிகளை சற்றுக் கடிந்து கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தண்ணீர் தங்கு தடை இன்றி செல்வதற்கு வசதியாக கடைமடை வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் இன்று துவங்கியது. நீர்வள ஆதாரத்துறையின் மூலம் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் 68 பாசன வாய்க்கால்கள் கிளை ஆறுகள் 689 கிலோமீட்டர் தூரத்திற்கு 10 கோடியே 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரப்படுகின்றன. அதற்கான துவக்க விழா நாகங்குடி பூண்டி வாய்க்காலில் நடைபெற்றது.

அமைச்சர் சி வீ மெய்ய நாதன் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் பணியினை கொடியசைத்து துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து உதவி செயற்பொறியாளர்கள் ரவீந்திரன்,  ஜெயராமன், உதவி பொறியாளர்கள் கண்ணதாசன் விஜயபாஸ்கர் சண்முகம் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

விழாவிற்கு வருகை தந்த டெல்டா பாசனதாரர் சங்க மாவட்ட தலைவர் ஆனதாண்டவபுரம் அன்பழகன் என்ற முன்னோடி விவசாயிக்கு பிறந்தநாள் என்பதை கேள்விப்பட்ட அமைச்சர் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பூஜை பொருட்கள் பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருப்பதை கண்ட அமைச்சர் அடுத்த முறை இந்த பொருட்களை மஞ்சள் பையில்தான் வைக்க வேண்டும் மாற்றம் நம்மிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும் பிளாஸ்டிக் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here