காஞ்சிபுரம், மார்ச். 11 –

காஞ்சிபுரம் அருகே கன்னிகாபுரத்தில் காணாமல் போன அரசு கால்வாயை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்து தர மாநகராட்சி கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி  27-வது வார்டுக்கு உட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் நத்தப்பேட்டை யிலிருந்து முத்தியால்பேட்டை வரை செல்லும் மழைநீர் கால்வாய் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

இந்த கால்வாயில் மழை நீர் நெடுஞ் சாலையை கடக்கும் வகையில் சிறு பாலமும் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென கால்வாய் பகுதி முழுவதையும் அப்பகுதியைச் சார்ந்த ஒரு சிலர் ஆக்கிரமித்து கால்வாயை காணாமல் போக செய்து உள்ளனர்.

இந் நிலையில் சிறிய அளவில் சென்று கொண்டிருந்த கால்வாயையும் தற்பொழுது முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்து மூடப்பட்டதால் மழைநீர், கழிவு நீர், வெளியே செல்ல முடியாமல் தேங்கி கொசுக்களின் உற்பத்தி கூடமாக மாறி அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்து காணாமல் போனது குறித்து கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள்  மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஷாலினியிடம் புகார் தெரிவித்தனர்.

பொதுமக்களின் புகாரின் பேரில் நேரில் சென்று பார்வையிட்ட மாமன்ற உறுப்பினர் ஷாலினி மழைநீர் கால்வாய் காணாமல் போயுள்ளது கண்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் ஷாலினி மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here