திருவள்ளூர், செப். 06 –
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளை சேர்ந்த திமுக இளைஞர் அணியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ்ராஜ் தலைமை தாங்கினார். மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் பா.தமிழரசன். யுவராஜ்.ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வே. ஆனந்தகுமார். முன்னாள் மாவட்ட பிரதிநிதி பா.து. தமிழரசன் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊராட்சிகள் தோறும் புதிய வாக்காளர்களை இளஞரணியில் இனைப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு அவர்களிடம் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை ரமேஷ்ராஜ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ராஜா. சிறுவாக்கம் சங்கர். ரவிச்சந்திரன். செல்வமணி .தாஸ். வன்னிப்பாக்கம் முரளி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் இளைஞர் அணி அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராம்முகேஷ் நன்றி கூறினார்.