மீஞ்சூர், டிச. 14 –
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் புயல் மழையால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது.
அதுப் போன்று திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் வசிக்கும் பெரும்பாலன மக்களின் குடியிருப்பு பகுதிகளில் புயல் வெள்ளம் புகுந்து அவர்களின்இயல்பு நிலைப் பாதிப்புக்கு உள்ளாகியது.
அதில் பாதிப்புக்குள்ளான 25 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்தினருக்கு மீஞ்சூர் ஈ3.காவல் நிலையத்தின் சார்பில், மளிகைப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசப் பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரணத் தொகுப்புகளை அவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
முன்னதாக ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் கார்த்திக், முத்துலட்சுமி செல்வம், தலைமை எழுத்தர் சர்வேஸ்வரன், மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்பாளர் ரவி, அனைத்து மாற்றுத்திறனாளிகளின் வழக்கறிஞர் பிரிவு சங்கத் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்டவர்களின் முன்னிலையில் 25 குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வின் போது காவலர்கள், வழக்கறிஞர் விக்னேஷ் , மற்றும் மாற்றுத் திறனாளிகள் பலர் உடனிருந்தனர்.