மயிலாடுதுறை, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறையில் அவயாம்பிகை உடனாகிய மயூரநாதர் ஆலயத்தில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு திருத்தேர் பவனி நடைபெற்றது. அவ்விழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், பயிலாடுதுறையில் மிக பிரசித்தி பெற்ற, பாடல்கள் பெற்ற கோயில் அவயாம்பிகை உடனாகிய மயூரநாதர் ஆலயம். திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்தில், வைகாசி திருவிழாவை ஒட்டி திருத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இத் திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, திருவாவடுதுறை ஆதின ஸ்ரீலஸ்ரீ, அப்பல வானதேசிக பராமாச்சாரியார் அவர்கள் திருத்தேரோட்டத்தை துவங்கி வைத்தார்.
தொடர்ந்து அத்திருத்தேர் கோயிலின் நான்கு வீதிகள் வழியாக வீதிவுலா நடைபெற்று, பக்தர்கள ஆரத்தி எடுத்து வழிபட்டு – கோயில் கீழ வீதியில், நிலைக்கு வந்தது.. இத் தேரோட்டத்தில், சிவனின பஞ்ச ரங்க இசைகள் இசைக்க வானவேடிக்கை, இடம் பெற, மேல தான முழக்கத்துடன். தேர் நிலைக்கு வந்து, அங்கு கூடியிருந்த ஆயிரகணக்கான பக்தர்களுக்கு மயூர நாதர் அருள்பாலித்தது பக்தர்களுக்கு, கண் கொள்ளா காட்சியாகும்.