மயிலாடுதுறை, மார்ச். 16 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்

மயிலாடுதுறை மாவட்டம், தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைப்பெறுவதை முன்னிட்டு சீர்காழியில் பதட்டமான வாக்குச்சாவடிகளை மாவட்ட  ஆட்சியர் மகாபாரதி, காவல் கண்காணிப்பாளர்  மீனா  ஆய்வு. கடந்த தேர்தல்களில் 50 சதவீதத்திற்கு குறைவான வாக்குபதிவு நடைபெற்ற மையங்களையும் பார்வையிட்டனர்.

பாராளுமன்ற தேர்தல் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. அதில் 14 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அப் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். சீர்காழி தென்பாதி வி.தி.பி.நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து சீர்காழி அடுத்த மேலையூர் சீனிவாசா மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி, மணி கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி ஆகியவற்றிலும் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்  ஆய்வு செய்தனர்.

மேலும் கடந்த கால தேர்தலில் வாக்குச்சாவடிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றனவா போன்ற விவரங்களை அப்போது விரிவாக ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் கேட்டறிந்தனர். வாக்குச்சாவடிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, கடந்த தேர்தல்களில் 50 சதவீதத்துக்கு குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற மையங்களையும் ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பார்வையிட்டு அப்பகுதிகளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், அதிக வாக்குப்பதிவு நடைபெற நடவடிக்கை எடுத்திடவும் அறிவுறுத்தினார். அவ்வாய்வின் போது சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here