மயிலாடுதுறை, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தின் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு வெகுசிறப்பாக நடைபெற்ற தெப்ப உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் புகழ்பெற்றதும், பழைமை வாய்ந்ததுமான மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அம்பாள் மயில் உருவில் இறைவனை பூஜித்ததாக அத்தல வரலாறு தெரிவிக்கிறது. மேலும் அங்கு ஆண்டு வைகாசித்திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாகிய தெப்போற்சவம் நேற்று வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு, சுவாமியும், அம்பாளும், சிறப்பு அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்திற்கு எழுந்தருளினர். அங்கு சோடச பூஜையும், மஹாதீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பம், ஆலய பிரம்ம தீர்த்த குளத்தில், 3 சுற்றுகள் வலம் வந்தது. திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.