கும்பகோணம், டிச. 23 –

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கலையரங்கில், தேசிய கணித தினத்தை முன்னிட்டு, 19 வது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ராமானுஜர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கணித மேதை ராமானுஜர் 136 வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய அளவிலான சீனிவாச ராமானுஜர் 19-வது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ராமானுஜர் விருது வழங்கும் விழா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.  அதில் அமெரிக்கா கலிபோர்னியா பல்கலைக்கழக முனைவர் யன்குயின் டேங்க் மற்றும் முனைவர் ருய்சியாங் சங் ஆகியோருக்கு இதில் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலாளர் முனைவர் ராமசாமி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2021 மற்றும் 2023 ஆண்டிற்கான சாஸ்த்ரா ராமானுஜர் விருதுகளை வழங்கினார்.

இந்த விருதானது தலா 10000 அமெரிக்க டாலர் மதிப்பிலான தொகை மற்றும் விருதுபட்டயத்தினை உள்ளடக்கியது. இவ்விருது சாசா நிகர்நிலை பல்கலைக்கழகத்தால் 2005 ஆம் ஆண்டு முதல் உலகளவில் சீனிவாச ராமானுஜனின் எண்ணியலில் சிறப்பான அரசு பணி செய்த 32 வயதுக்கு உட்பட்ட கணிதவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சீனிவாச ராமானுஜனின் பிறந்த நாள் தினம் சர்வதேச கணித தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் சாஸ்த்ரா பல்கலைக்கழக ‌ திட்டமிடல் மற்றும் வளர்ச்சி புலத் தலைவர் பேராசிரியர் சாமிநாதன் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார்.

மேலும் அதில் அமெரிக்கா ஆஸ்திரியா, கனடா, ஜெர்மனி மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களை சார்ந்த கணித பேராசிரியர்  கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார்கள். மேலும் அவ்விழாவில்ஃ திரளான மாணவ மாணவிகள் பேராசிரியர் உள்ளிட்வர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here