பொன்னேரி, ஜூன். 25 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காட்டூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கொங்கியம்மன், மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கும்பாபிஷேகத்திற்காக நான்கு கால யாகசாலை வேள்வியுடன் துவங்கிய விழாவில் விக்னேஸ்வர பூஜைகளும், மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும் நடைபெற்றது. பின் கடம் புறப்பாடு நடைபெற்று ஆலய கோபுர விமானங்கள் மாடவீதி பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்காக பல்வேறு நதிகளில இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கோபுர கலசங்களில் இடப்பட்டு மிகச்சிறப்பாக மகா கும்பாபிஷகம் நடைப்பெற்றது. அதனைத்தொடர்ந்து இவ்விழாவிற்கு வருகை தந்த பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது.
மேலும் இவ்விழாவினைக் காண பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் காட்டூர் கிராம மக்கள் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜே. கோவிந்தராஜன், மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ரவி, மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன், ஒன்றிய கவுன்சிலர் நந்தினி, முன்னாள் தலைவர் முனுசாமி உள்ளிட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று இவ்விழாவினை சிறப்பித்தனர்.