பொன்னேரி, ஜூலை. 31 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள சின்னக்காவனம் கிராமத்தில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீநெல்லூரம்மன் அம்மன் திருக்கோயிலாகும்.
இந்நிலையில் இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைப்பெற்றது. முன்னதாக யாக கலச பூஜைகள், நவ கிரக தோஷம் நீங்க வேள்விகள் நடத்தப்பட்டு பூஜைகள் நிறைவுப்பெற்ற நிலையில், தொடர்ந்து அங்கிருந்து மேலதாளம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
கடங்களில் நிரப்பி வைக்கப்படிருந்த பல்வேறு நதிகளின் புனித நீரானது கோபுர விமான கலசங்களுக்கும் அம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாரதனை காட்டப்பட்டு வழிபாடு நடைப்பெற்றது.
இக் கும்பாபிஷேக விழாவில் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அருசுவை உணவு பரிமாறப்பட்டது.
இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும், அத்திருக்கோயில் நிர்வாகம் மற்றும் அக்கிராம மக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து வெகுச் சிறப்பாக செய்திருந்தனர்.