மதுரவாயல்,ஏப். 04 –

மதுரவாயல் பகுதியில் அதிகாலை வேளையில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சரக்கு வாகனங்கள், 1 ஆட்டோ மற்றும் 1 இருசக்கர வாகனத்தை கட்டையால் தாக்கி உடைத்து, சேதப்படுத்தியவர்களை தடுக்க வந்த முதியவரையும்  கட்டையால் தாக்கிய 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, மதுரவாயல், பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் சதிஷ், வ/24,  என்பவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை சுமார் 4 மணியளவில், வெளியில் சத்தம் கேட்டு எழுந்து வெளியில் வந்து  பார்த்தபோது, 2 நபர்கள் தெருவில் நிறுத்தி வைத்திருந்த 2 TATA ACE சரக்கு வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோவின் கண்ணாடியை உருட்டுக்கட்டையால் உடைத்து கொண்டிருந்தனர். அப்போது சதிஷ் ஏன் இவ்வாறு செய்கிறறீர்கள் என கேட்டுள்ளார். உடனே அந்த நபர்கள் சதிஷின் பல்சர் இருசக்கர வாகனத்தையும் கட்டையால் தாக்கி உடைத்து விட்டு, சதிஷையும் தலையில் தாக்கிவிட்டுச் சென்றனர், அதை தடுக்க வந்த ஷரி கிருஷ்ணண் என்ற முதியவரையும்  தாக்கிவுள்ளார்கள். பின்னர்  காயமடைந்த சதிஷ் இச்சம்பவம் குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்தில் விசாரணை செய்து மேற்படி ரகளையில் ஈடுபட்ட அதே தெருவில் வசிக்கும் நரேந்திரன், வ/29  மற்றும் மேஷக், வ/19  ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில் இருவரும் மதுபோதையில் தகராறு செய்து அந்த தெருவில் நிறுத்தியிருந்த வாகனங்களை உடைத்ததும், இதில் மேஷக் என்பவர் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைக்குப் பின்னர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி போலீசார்  சிறையில்  அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here