கும்பகோணம், மார்ச். 31 –

கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட இழுப்புக்கேரை எனும் பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இங்கு குடியிருந்து வருகின்றனர்.

மேலும் அவர்கள் அனைவரும் கும்பகோணம், அரியலூர், பாபநாசம், கபிஸ்தலம், சுவாமிமலை, போன்ற ஊர்களில், நன்கொடைகள், அன்பளிப்புகள் பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை நிறைவு செய்து வருகின்றார்கள்.

மேலும் இதில் பூமிகா என்ற திருநங்கை கும்பகோணத்தில பேருந்து நிலையத்தில் கலெக்சன் முடித்து வருகின்ற போது, பாபநாசம்  மேலத்தெருவில் வசித்து வரும் மதகரம், காசி ஐயா, மகன் ஐயப்பன், (26) என்பவர் தனக்கு அப்பா அம்மா யாரும் கிடையாது எனவும் மேலும் நான் ஒரு அனாதை என்றும்,  நான் உங்களைப் போல் மாற வேண்டும் என்றவாறு அவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவருடன் இலுப்புகேரைக்கு சென்றதாகவும்தெரிய வருகிறது.

மேலும், அவர் அத்திருநங்கையின் வீட்டில் இரண்டு நாள் அவருடன் தங்கி உல்லாசமாக இருந்ததாக தெரியவருகிறது. மேலும் அவ்வேளையில் அத்திருநங்கையிடம் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி அவரை ஏமாற்றியும் உள்ளார். மேலும், அவர் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு தெரியாமல் திருநங்கை வைத்திருந்த இருசக்கர வாகனம் மற்றும் ரொக்கம் பணம், மொபைல் ஆகியவற்றை திருடி சென்று விட்டதாக தெரிய வருகிறது.

மேலும் அதனைத் தொடர்ந்து, அத்திருட்டு சம்பந்தமாக அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் திருநங்கைகள் புகார் கொடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து பாபநாசம் காவல்துறை கண்காணிப்பாளர்  பூரணி மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் வனிதா மற்றும் அய்யம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் மற்றும்  முதல் நிலைகாவலர் சௌந்தர் ஆகியோர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தும், மேலும் ஐயப்பன் திருடிச்சென்ற மொபைல் எண்களை ஆராய்ந்தபோது, அவர் நாகப்பட்டினம், மற்றும் பலங்கிமான், ஆகிய ஊர்களில் சுற்றியது தெரிய வந்துள்ளது.

மேலும் அவர் மதகரம் அருகே உள்ள கிராமத்தில் ஒளிந்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அய்யம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் முதல் நிலை காவலர் சௌந்தர் ஆகியோர் ஐயப்பனை கைது செய்தனர்.

ஐயப்பன்  இதுபோல ஒயின்ஷாப்புக்கு வருபவர்களை போதையில் ஆழ்ந்து உறங்கியவர்களிடம் பைகளில் பணம் மற்றும் செல்போன் பறிப்பது வழக்கமாக கொண்டவர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here