கும்பகோணம், ஜூலை. 17 –
கும்பகோணம் மாநகரம் அருகே காதலுக்கு துணை போனதாக குற்றம்சாட்டி, சென்டிரிங் தொழிலாளி குத்தி கொலை செய்த வழக்கில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராதிகா பெண்ணின் தந்தை உள்ளிட்ட நான்கு மகன்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார்.
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவில் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சாக்கோட்டை அம்பேத்கர் நகரில் அன்பழகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது மகளை அதேப்பகுதியில் வசித்து வரும், இவரது கார் ஓட்டுநர் ஒருவர் காதலித்து வந்துள்ளார். அதனையறிந்த அன்பழகன் கார் ஓட்டுநரை அழைத்துக் கண்டித்துள்ளார். மேலும் தன் காதலுக்கு உதவிச் செய்ததாகக் குற்றம் கூறி, அப்பகுதியில் வசித்து வரும் பவுன்ராஜ் மகன் சுந்தரபாண்டியன் ( 36 ) என்பவர்கள் குடும்பத்துடன் பகைமையை அன்பழகன் வளர்த்து வந்துள்ளார் எனத் தெரிய வருகிறது.
இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜனவரி 11 ஆம் தேதி இரவு, பவுன்ராஜ் தனது மனைவி தமிழரசி, மகன்கள் சுந்தரபாண்டியன், மருதுபாண்டி, கார்த்தி ஆகியோருடன் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டியிருந்ததாகவும், அப்போது அன்பழகன் மற்றும் அவரது மகன்கள் அன்புநிதி, அறிவுநிதி, அருள்நிதி, அழகுநிதி ஆகியோர் சேர்ந்து, சுந்தரபாண்டியனை கத்தியால் குத்தி தாக்கியதாகவும், அப்போது அதனைத்தடுக்க வந்த பவுன்ராஜ், மற்றும் கார்த்தி இருவரையும் அவர்கள் தாக்கி விட்டு தப்பியோடியாதாகவும் காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த சுந்தரபாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதுக் குறித்து நாச்சியார்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அன்பழகன் 60, அன்புநிதி 32, அறிவுநிதி 30, அருள்நிதி 28, அழகுநிதி 26, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவ் வழக்கு கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றத்தில் கடந்த ஆறாண்டுகளாக நடைப்பெற்று வந்த நிலையில், அவ்வழக்கினை விசாரித்த நீதிபதி ராதிகா, கொலையில் ஈடுப்பட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 13,750 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.