பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பகுதியில் 1381 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

திருவள்ளூர்:

 

பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் தேர்தலில் பணப்பட்டு வாடாவை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

 

அதேப் போன்று இன்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு எனும் பகுதியில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 1,381 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்து, பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத் துள்ளனர்.

 

இத் தங்கம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு  கொண்டு செல்லப் பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here