மதுக்கூர், மே. 23 –

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட அத்திவெட்டி விக்ரமம் மற்றும் மதுக்கூர் வடக்கு ஆகிய பஞ்சாயத்துகளில் துவக்க விழா தமிழக முதல்வரால் காணொலிக் காட்சி வாயிலாக துவக்கி வைக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் பிரபாகர் ஆகியோர் அத்திவெட்டி ஊராட்சி மன்ற விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை மானியத்தில் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலந்துகொண்டு மூன்று பஞ்சாயத்துகளிலும் தேர்வு செய்யப்பட்ட பண்ணை குடும்பங்களுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் 100 சத மானியத்தில் வழங்குதல் 75 சதவீத மானியத்தில் 15 விவசாயிகளுக்கு வரப்பில் உளுந்து சாகுபடி செய்ய வம்பன் 8 உளுந்து மற்றும் 50 சத மானியத்தில் கை தெளிப்பான் மற்றும் விசை தெளிப்பான் ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அத்திவெட்டி மற்றும் விக்ரமம் பஞ்சாயத்துக்களில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர்  பிரபாகர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு கைத் தெளிப்பான் மற்றும் தென்னங்கன்றுகளை வழங்கினார். மதுக்கூர் வட்டார அட்மா திட்ட தலைவர் இளங்கோ அத்திவெட்டி மற்றும் விக்ரமம் பஞ்சாயத்துக்களில் கலந்துகொண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் தேவைகளை பதிவு செய்து அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் வளர்ச்சி அடைய கேட்டுக்கொண்டார். மேலும் பண்ணை குடும்பங்களைச் சேர்ந்த மகளிருக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வழங்கியதோடு தோட்டக்கலைத் துறையின் கீழ் விவசாயிகளுக்கு வீட்டுக் காய்கறி தோட்ட விதைகள் மற்றும் பழக்கன்றுகளையும் மானியத்தில் வழங்கினார்.

மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தில் மாவட்ட கவுன்சிலர் செந்தாமரை ஞானசேகரன் செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன் மற்றும் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் பழக் கன்றுகள் கைத்தெளிப்பான் களை மானியத்தில் வழங்கினார்.

மூன்று பஞ்சாயத்துகளிலும் 200க்கும் மேற்பட்ட பண்ணை மகளிர் குழு உறுப்பினர்கள் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடக்க விழா நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மதுக்கூர் ஊராட்சிமன்ற தலைவர் நாராயணன் விக்ரமம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அத்திவெட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

திட்ட அலுவலர்கள் பூமிநாதன் ஜெரால்டு கார்த்தி தினேஷ் முருகேஷ் சுரேஷ் சரவணன் மற்றும் கோபி ஆகியோர் விவசாயிகளை புகைப்படம் எடுத்து வேளாண் போர்டலில் பதிவு செய்தனர். அட்மா திட்ட அலுவலர்கள் ஐயா மணிராஜ் மற்றும் சிசி பணியாளர்கள் மற்றும் பட்டுகோட்டை வட்டார காப்பீட்டு அலுவலர்கள் மணி சரண் மற்றும் ராம் ஆகியோர் விழாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.

வேளாண் அலுவலர் கார்த்திகா துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி உதவி விதை அலுவலர் இளங்கோ ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி அனைவருக்கும் நன்றி கூறினார்.

மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் விவசாயிகளுக்கு பழக் கன்றுகள் மற்றும் தென்னங்கன்றுகளை வழங்கினார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here