கும்பகோணம், ஜன. 24 –
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக இருப்பு வைக்கும் பொருட்டு, கும்பகோணம் அருகே திருமண்டங்குடி பகுதியில் புதிய சேமிப்பு கிடங்கை, மயிலாடுதுறை எம்பி செ இராமலிங்கம் தலைமையில் அரசின் தலைமை கொறடா கோவி செழியன் திறந்து வைத்தார்.
இப்புதிய சேமிப்பு கிடங்கில் சுமார் 30 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்க முடியும் என்றும், தேவைப்படும் இடங்களில் புதிதாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றும், நாள் ஒன்றுக்கு 500 அல்லது 600 மூட்டைகள் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும். என தமிழக முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாக கொறடா கோவி செழியன் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் கும்பகோணம் அருகேயுள்ள திருமண்டங்குடியில் புதிய சேமிப்பு கிடங்கு திறப்பு விழா மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ ராமலிங்கம் தலைமையிலும், தஞ்சை மண்டல நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மேலாளர் முன்னிலையிலும் இதனை அரசின் தலைமை கொறடா கோவி செழியன் திறந்து வைத்தார்,
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் எஸ் கே முத்துச்செல்வன் கும்பகோணம் கோட்டாட்சியர் லதா மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர், திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலையின் பின்புறம் உள்ள சுமார் 13 ஏக்கர் பரப்பளவிலான இத்திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் சுமார் 30 ஆயிரம் டன் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக சேமிக்க முடியும் கும்பகோணம் திருவிடைமருதூர் பாபநாசம் ஆகிய மூன்று தொகுதிகளுக்குட்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் இந்த சேமிப்பு கிடங்கில் சேமிக்க முடியும்.
இந்த நிகழ்ச்சியில் பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கும்பகோணம் துணை மேலாளர் இளங்கோவன் தஞ்சை மண்டல தரக்கட்டுப்பாட்டு பொறுப்பாளர் செந்தில்குமார் கண்காணிப்பாளர்கள் சின்னத்துரை. ரவி மற்றும் ஒப்பந்தக்காரர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஊழியர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருமண்டங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.