கும்பகோணம், ஜன. 13 –

108 வைணவ தலங்களில் ஒன்றானதும், உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமும் ஆன நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று காலை, உற்சவப்பெருமாள் தாயாருடன் முத்தங்கியில் எழுந்தருள, பரமபத வாசல் (எ) சொர்க்கவாசல்  திறப்பு வைபவம் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தும் பரமபத வாசலை கடந்து வந்ததை எண்ணி மனம் மகிழ்ந்தனர்.

இத்தலத்தில் ஆண்டு தோறும் மார்கழி  தெப்பத்திருவிழா பத்து  நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு இவ்விழா கடந்த 06ம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக, 4ம் நாளான 09ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை அரசின் ஊரடங்கு காரணமாக, பொது மக்களுக்கு தரிசன அனுமதியில்லாமல் பிரசித்தி பெற்ற கல்கருட சேவை நடைபெற்றது,  பின்னர் 8ம் நாளான இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பரமபத வாசல் (எ) சொர்க்கவாசல் திறப்பு வைபவம், சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்த குறைவான பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர் அப்போது, பரமபத வாசல் திருக்கதவிற்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து சுவாமிகளுக்கும், திருகதவிற்கும் நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்ட பின்னர் அவ்வாசல் வழியே சிறப்பு முத்தங்கி  அலங்காரத்தில் உற்சவர் சீனிவாசப்பெருமாள் வஞ்சுளவள்ளி தாயாருடன் கடந்து வர, அவரை பின் தொடர்ந்து ஏராளமானோர் பரமபத வாயிலை கடக்க, பிரகார உலாவாக வந்து தாயருடன் பெருமாள் திரண்டிருந்த பக்தர்களுக்கு சேவை சாதித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here