கும்பகோணம், டிச. 22 –

கும்பகோணத்தில் சக்கரபாணி சுவாமி கோவில் அருகில் காரில் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக கிழக்கு காவல் நிலைய காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து காருடன் 75 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, சுந்தரப்பெருமாள் கோவிலை சேர்ந்த விநாயகம் என்பவரை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

கும்பகோணத்தில் சக்கரபாணி சுவாமி கோவில் அருகே காரில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் படி மேலக்காவேரி பாலக்கரை தாராசுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து காவல்துறையினர் சக்கரபாணி சுவாமி கோவில் அருகில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் அழகேசன் மற்றும் காவல்துறையினர் அவ்வழியாகச் சென்ற போது சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த காரை திறந்து பார்த்த போது, அதில் பிரபல சேமியா நிறுவன பைகளில் குட்காவை வைத்து கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து 10 பைகளில் இருந்த 75 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக  சுந்தரபெருமாள் கோவிலை சேர்ந்த விநாயகம் என்பவரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here