கும்பகோணம், ஏப். 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..

தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என அழைக்கப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலின் தேர் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து கொண்டிருந்தது. தற்போது தெற்கு வீதி வழியாக வந்த தேர் ராமசாமி கோவில் அருகே சென்ற போது தேரின் வலதுபுற முன் பக்க சக்கரம் சாலையில் உள்வாங்கி 10 அடிக்கு உள்ளே இறங்கியது.

தற்போது 5 ஜேசிபி எந்திரங்கள் உதவியுடன், தேரை ஜாக்கி வைத்து மேலே தூக்கும்பணி நடைபெறுகிறது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் புதைந்த தேரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேர் நிலைக்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here