கும்பகோணம், மே. 23 –
பழவத்தான் கட்டளை ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சார்பில் 325 நபர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கும் விழா நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்று சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மரக்கன்றுகளை வழங்கினார்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக பழவத்தான் கட்டளை ஊராட்சியில் இதயம் மகாலில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. எனது சி வேளாண்மை உதவி இயக்குனர் விஜயலட்சுமி இதை ஆய்வு துணை இயக்குனர் வித்யா வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன் வட்டார வளர்ச்சி ஆணையர் சூரிய நாராயணன் ஒன்றிய துணைத் தலைவர் கணேசன் ஊராட்சி மன்ற துணை தலைவர் கார்த்திகேயன் துணை வேளாண்மை அலுவலர் சாரதி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் விழா பேரூரையற்றி 325 விவசாயிகளுக்கு வேளாண்மை துறை மூலம் நெட்டை தென்னங்கன்றுகள், பயிறு வகை விதைகள் கைத்தெளிப்பான் மற்றும் விசைத்தெளிப்பான் தோட்டக்கலை மூலம் வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான தளைகள் மற்றும் ஊக்கத்தொகை போன்றவற்றை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் வழங்கினார்.