கும்பகோணம், டிச. 14 –

கும்பகோணத்தில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ஜெயந்த் முரளி ஏ.டி.ஜி.பி வருகை தந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் சிலைகள் திருட்டு வழக்குகளை விரைவு படுத்துவதற்காகவும், கும்பகோணத்தில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வந்திருப்பதாகவும், மேலும், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளில் 6 சிலைகள் விரைவில் தமிழகத்திற்கு வர இருப்பதாகவும் ஜெயந்த் முரளி தெரிவித்தார்.

சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் வழக்குகள் விசாரணை நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும், சிலை திருட்டு தடுப்பு காவல்துறையை பலப்படுத்துவதற்கு கூடுதலாக  பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உலோக  சிலைகள் பாதுகாப்பு மையங்கள் புதிதாக சில இடங்களில் திறக்கப்பட இருப்பதாகவும் ஜெயந்த் முரளி மேலும் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here