கும்பகோணம், மார்ச். 26 –

கும்பகோணம் அருகே உள்ள தத்துவாஞ்ச்சேரி அரபிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கும்பகோணம் அருகே  தத்துவாஞ்சேரியில்  நடைபெற்ற அல் மதரஸதுன் நூரிய்யா மகளிர் அரபிக்கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா ஜமாஅத் தலைவர் அஹமது பாட்சா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாணவியர்களுக்கான கிராஅத் போட்டி , பேச்சுப்போட்டி மற்றும் சிறப்பு பட்டிமன்றம் மற்றும் இன்றைய சூழலில் மார்க்கப் பற்றில் மிகைத்து இருப்பது ஆண்களா ? பெண்களா ? என்கிற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

தொடர்ந்து அரபிக்கல்லூரியின் செயலாளர் உமர் ஜஹாங்கீர் முதல்வர் முஹம்மது தாவூதி  கல்லூரியின் தலைவர் அப்துல் சலாம் திருவிடைமருதூர் வட்டார மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவர் ஷாஜஹான்,  ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட செயலாளர் மௌலவி ஜபருல்லாஹ் பாஜில்  உள்ளிட்ட உலமா பெருமக்கள் வாழ்த்துரை வழங்கினர்கள்.

தாவூதிய்யா அரபிக்கல்லூரி கல்லூரி துணை முதல்வர் முஹம்மது சுல்தான் ரஷாதி பட்டங்களை வழங்கி பேரூரை ஆற்றினார்கள். சேலம் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி பேராசிரியர் முஹம்மது அபுதாஹிர் பாகவி  சிறப்புரையாற்றினார்கள். கல்லூரியின் பொருளாளர் ஹாஜா சிராஜுதீன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் , முதல்வர் , பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் அல் மதரஸத்துன் நூரிய்யா மகளிர் ( நிஸ்வா அரபிக்கல்லூரி தத்துவாஞ்சேரி நாட்டாண்மை , பஞ்சாயத்தார்கள் , ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தார்கள் பெருமளவில் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மதரஸா மற்றும் மஹல்லா நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here