கும்பகோணம், மே. 23 –

கும்பகோணம் சோழபுரம் கடைவீதியில் உள்ள பல்பொருள் அங்காடி நடத்தி வருபவர் ஜாகீர்உசேன் இவரிடம் நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தன்னிடம் ரூ. 8000 த்திற்கான சில்லரை காசுகள் உள்ளது. பணம் கொடுத்தால் சில்லறை தருகிறேன் எனக் கூறவும், இதனைத் தொடர்ந்து  ஜாகிர் உசேன் தனது கடையில் வேலை பார்க்கும் பிரகாஷ் என்பவரிடம் ரூ. 8000 பணத்தை கொடுத்து வந்த நபருடன் சில்லரை வாங்கி வர அனுப்பி வைத்துள்ளார்.

வந்த நபர் ஸ்கூட்டரில் பிரகாஷை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றதும் ஒரு கோயில் வாசலில் நிறுத்திவிட்டு கோவிலில் பணம் இருக்கிறது கொண்டு வந்து தருகிறேன் எனக்கூறி, பிரகாஷிடம் இருந்த ரூ.8 ஆயிரம் பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகி விடுகிறார்.

நீண்ட நேரம் கோவில் வாசலில் காத்திருந்து மர்ம நபர் வராததால் தாம் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த பிரகாஷ் நடந்த விபரத்தை கடை உரிமையாளர்களிடம் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சோழபுரம் காவல்நிலையத்தில் வணிகர் சங்கம் சார்பில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது இதுபோல் வணிகர்கள் ஏமாற வேண்டாம் என சோழபுரம் வணிகர் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இதுபோல் குற்றச் சம்பவங்கள் சோழபுரம் பகுதியில் அதிகம் நடைபெறாமல் இருக்க வணிகர் சங்கம் சார்பில் 50 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் சோழபுரம் பகுதிகள் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சம்பவம் குறித்து சோழபுரம் காவல் நிலைய போலீசார் வணிகர் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here