கும்பகோணம், ஜூலை. 08 –

கும்பகோணத்தில் தென்னை விவசாயிகளுக்கு, உரித் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்களுக்குரிய நியாயமான விலை கிடைத்திட மத்திய மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி தலைமை அஞ்சலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் செங்கொடிகளுடன்,  திரண்டு நூதன முறையில், தேங்காய்களை சாலையில் உடைத்து கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணத்தில் சமீப காலமாக தென்னை விவசாயிகள் விளைச்சல் செய்யும் தேங்காய்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். இந்த அவல நிலையை போக்க  மத்திய மாநில அரசுகள், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 150 மற்றும் உரித் தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 50 கிடைத்திடவும், கேரளா மாநிலத்தை போல வட்டார அளவில் கொப்பரை கொள்முதல் நிலையங்களை திறந்திடவும், பொது விநியோக அங்காடி மற்றும் சத்துணவு கூடங்களில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்திட வலியுறுத்தியும், தலைமை அஞ்சலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த மாவட்ட பொறுப்பு செயலாளர் சாமு தர்மராஜன் தலைமையில் திரள ஆர்ப்பாட்டத்தை ஏஐடியுசி  மாவட்ட செயலாளர் ஆர் தில்லைவனம் முன்னிலையில், சிபிஐ  மாவட்ட செயலாளர் மு அ பாரதி தொடங்கி வைக்க, ஏராளமான தென்னை விவசாயிகள் செங்கொடிகளுடன், தேங்காய்களை ஏந்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், நிறைவில், கையில் வைத்திருந்த தேங்காய்களை சாலையில் போட்டு உடைத்து நூதன முறையில் அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here