மாசிமக பிரமோற்சவ கொடியேற்றம் இன்று கும்பகோணம் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. விஜயவள்ளி தாயார் மற்றும் சுதர்சனவள்ளி தாயாருடன் எழுந்தருளிய, சக்கரபாணிசுவாமிக்கும் கொடிமரத்திற்கும் நாதஸ்வர மேள தாளம் முழங்க, அலங்காரம் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

கும்பகோணம், பிப். 9 –

கும்பகோணம் மாநகரில் ஆண்டு தோறும் 12 சைவ திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ ஸ்தலங்களுடன் இணைந்து ஒருசேர பத்து நாள் விழாவாக நடைபெறும் மாசிமக பிரமோற்சவம் மிகவும் விசேஷமானது, இவ்வாண்டிற்காண மாசிமக பிரமோற்சவத்தின் துவக்கமாக நேற்று ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர் கௌதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் காளஹஸ்தீஸ்வரர் என ஆறு சைவ திருத்தலங்களில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

எஞ்சிய பிற ஆறு சைவத்தலங்களில் இவ்விழா வரும் 17ம் தேதி ஏகதின உற்சவமாக நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து, இன்று வைண ஸ்தலமான சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் உற்சவர் சக்ரபாணிசுவாமி, விஜயவள்ளி தாயார் மற்றும் சுதர்சனவள்ளி தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருள, பட்டாட்சார்யர்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேள தாள மங்கள் வாத்தியங்கள் ஒலிக்க, ஸ்ரீ பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற திருக்கொடி தங்க கொடிமரத்தில் ஏற்றபட்டு அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதே போன்று இராஜகோபாலசுவாமி திருக்கோயில் மற்றும் ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில் ஆகிய வைணவ தலங்களிலும் மாசிமக பிரமோற்சவ கொடியேற்றம் இன்று சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது

 

மாசிமக பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக 17ம் தேதி வியாழக்கிழமை காலை சக்கரபாணிசுவாமி திருத்தேரோட்டமும், நண்பகல் 12 சைவத்திருத்தலங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் மகாமககுளத்தின் நான்கு கரைகளிலும் ஒருசேர எழுந்தருள, மாசிமக தீர்த்தவாரி நடைபெறுகிறது இதே போன்று, வைணவத்தலங்கள் ஐந்தில் இருந்தும் உற்சவர்கள் அன்று மாலை காவிரியாற்றின், சக்கரப்படித்துறையில், எழுந்தருள, அங்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here