கும்பகோணம், ஏப். 18 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…

கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி திருக்கோவிலில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று, ஓலைச் சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுவதும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்விய பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாகவும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் அமைந்துள்ள அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயிலாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்தலத்தில் சித்திரை பெருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு இவ்விழா கடந்த 15-ந் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது‌.

மேலும் இப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று இரவு சாரங்கராஜா, சக்கரராஜா, ஓலைச் சப்பரத்தில் எழுந்தருள ஓலைச் சப்பரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓலைச் சப்பரத்தை சாரங்கராஜா, சக்கரராஜா என்று முழக்கமிட்ட படி இழுத்து வந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here