கும்பகோணம், ஏப். 02 –

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க கும்பகோணம் நாகை மண்டல பொதுக்குழு கூட்டம் இன்று கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் அதன் பொது செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 206 பொதுக்குழு உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களும், 125 சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், அரசு போக்குவரத்து கழகங்களில், காலியாகவுள்ள பணியிடங்களுக்கு, விரைந்து பணிநியமனம் செய்ய வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை உடனடியாக பேசி முடித்திட வேண்டும், நகர பேருந்துகளில் மகளிர் இலவச பயணத்தால் வருவாய் படி பாதிக்கப்படும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சிறப்பு படி வழங்க வேண்டும்.

2003ம் ஆண்டு போக்குவரத்து கழகத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்திட வேண்டும், போக்குவரத்து கழக வரவு செலவிற்கு இடையிலான பற்றாக்குறையை தமிழக அரசே ஏற்று அதற்காண நிதியை வழங்கிட வேண்டும், 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தொமுச நிர்வாகிகள் பலரும் பழிவாங்கப்பட்டு, பல்வேறு தண்டனைக்குள்ளாகி, வருவாய் இழப்பிற்கு ஆளாகினர் அவர்களுக்கு அந்த தண்டனையில் இருந்து விடுவிக்கவும், இழந்த அந்த ஊதியம் கிடைக்க செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஏகமனதாக இப்பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இப்பொது குழு கூட்டத்தில் பாண்டியன் பொதுச் செயலாளர் சங்கரன் வீரமணி ஜெயச்சந்திரன் துணை பொதுச்செயலாளர்கள் இணைச் செயலாளர்கள் பழனிச்சாமி முருகானந்தம் செல்வராஜ் பரிசோதகர் சங்கம் பொதுச்செயலாளர் கோவி ஆனந்த் நிர்வாக பணியாளர் சங்க பொதுச் செயலாளர் சந்திரசேகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டன

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here