கும்பகோணம், ஜூலை. 20 –
கும்பகோணத்தில் 2017 ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டிய 15 சதவீத ஓய்வூதிய உயர்வையும், 2019 வி.ஆர்.எஸ். ஓய்வூதியர்களுக்கு மறுக்கப்பட்ட ஓய்வூதிய பலன்களையும் உடனே வழங்க வலியுறுத்தியும், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை அமல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அகில இந்திய பி.எஸ்.என்.எல். டாட் . ஓய்வூதியர் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கிளை சார்பில், மெயின் வளாகத்தில் இன்று ஒருநாள் அடையாள தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க கிளை சார்பில், 2017 ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டிய, 15 சதவீத ஓய்வூதிய உயர்வையும், 2019 விஆர்எஸ் ஓய்வூதியர்களுக்கு மறுக்கப்பட்ட ஓய்வூதிய பலன்களையும் உடனே வழங்க வலியுறுத்தியும், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை அமல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒருநாள் அடையாள தர்ணா போராட்டம் இன்று மெயின் இணைப்பகத்தில் மாவட்ட துணை தலைவர் ஆர்ஏ பக்கிரிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இத் தர்ணாப் போராட்டத்தில் தமிழ் மாநில உதவித்தலைவர் மாணிக்கமூர்த்தி, மாவட்ட செயலாளர் மணிவண்ணன், மாவட்ட தலைவர் அருட்பெருஞ்ஜோதி, கிளை தலைவர் முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் விரைவில் இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி டெல்லி சஞ்சார் பவன் நோக்கி பேரணி சென்று முறையிடவும் அகில இந்திய சங்கம் முடிவு செய்துள்ளது என தெரிவித்தனர்.