கும்பகோணம், ஜூலை. 03 –
கும்பகோணம் அருகேவுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் ஐஸ்வர்யா நகரில் கூலித்தொழிலாளி ஒருவர் மரத்தில் முருங்கை பறித்து விட்டு அதன் கிளையை வெட்டிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பிள்ளை மண்டபம் ஐஸ்வர்யா நகர் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் (49) இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கௌரி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வீட்டுக்கு அருகில் உள்ள முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறித்து விட்டு முருங்கைக் கிளையை வெட்டிய போது முருங்கைக்கு மரத்துக்கு மேலே இருந்த மின்சார கம்பி சின்னதம்பி மேல் தாக்கி முருங்கை மரத்திலேயே உயிரிழந்தார். இதுக் குறித்து தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் சின்னதம்பியின் உடலை மீட்டனர்.
மேலும் இவ்விபத்துக் குறித்து நாச்சியார்கோவில் காவல்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சின்னத்தம்பி உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
                
		






















