கும்பகோணம், ஜூலை. 22 –
சென்னை மாமல்லபுரத்தில், வரும் 28ம் தேதி தொடங்கும் 44வது சர்வதேச ஒலிம்பியாட் சதுரங்க போட்டி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மதிவண்டி பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவியர்கள் சதுரங்க போட்டி குறித்த விளம்பர மேல்சட்டை மற்றும் தொப்பி அணிந்து கொண்டு பங்கேற்றனர். இம்மிதிவண்டி பேரணியை சட்டமன்ற உறுப்பினர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை மாமல்லபுரத்தில், வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை இருவார காலம் நடைப்பெறும் 44வது சர்வதேச ஒலிம்பியாட் சதுரங்க போட்டியில். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். இப்போட்டியை தமிழக அரசு நடத்திட சுமார் ரூ 102 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த சர்வதேச சதுரங்க போட்டி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், இன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மிதிவண்டி பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவியர்கள் சதுரங்க போட்டி குறித்த விளம்பர மேல்சட்டை மற்றும் தொப்பி அணிந்து கொண்டு பங்கேற்றனர்
இப்பேரணி மகாமக குளக்கரையிலிருந்து, புறப்பட்டு முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்றது. இந்த பேரணியை கோட்டாட்சியர் லதா தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு இளைஞர் நல அலுவலர் ஆண்டனி அதிர்ஷ்டராஜ், நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும். இப் பேரணியில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றது என்பது குறிப்பிடதக்கது.