கும்பகோணம், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணம் அருகேவுள்ள திருநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா திரெளபதி அம்மன் ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் கோபுரத் தரிசனம் செய்தனர்.
திருநல்லூர் கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ தர்மராஜா திரெளபதி அம்மன் ஆலயம் வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் சக்தியாக விளங்கி வரும் அத்திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆம் தேதி வியாழக்கிழமை முதல் கால யாகபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் தொடங்கியது,
இன்று 2 ஆம் கால யாகசாலை பூஜை நிறைவாக, மகா பூர்ணாஹதியுடன் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் அதனையடுத்து, விமான கலசங்களுக்கும், சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்ற, மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், மற்றும் திருநல்லூர் கிராமவாசிகள் நாட்டாமைகள் பஞ்சாயத்தார்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.